தஞ்சாவூர் மாவட்டம், கபிஸ்தலம் அருகே விவசாயக் கூலித் தொழிலாளியான விஜயலட்சுமி (75) என்பவர், கும்பகோணத்தில் இருந்து திருவையாறு நோக்கிச் சென்ற டிராக்டர் மோதி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். கணவர் இறந்த நிலையில் தனியாக வசித்து வந்த இவர், கடைவீதியில் பொருட்களை வாங்கிக் கொண்டு வீடு திரும்பும்போது இந்த துயரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. விபத்து ஏற்படுத்திய டிராக்டரை ஓட்டி வந்த 17 வயது சிறுவனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.