தஞ்சாவூர் மாவட்டத்தில் இதுவரை 3.33 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. லாரிகள் வேலைநிறுத்தம் காரணமாகத் தேங்கியிருந்த மூட்டைகள் தற்போது கிடங்குகளுக்கு அனுப்பப்பட்டு வருகின்றன. விஏஓக்களின் வேலைநிறுத்தத்தால் சிட்டா, அடங்கல் பெற முடியாமல் விவசாயிகள் சிரமப்படுகின்றனர். அரசு மற்றும் அதிகாரிகள் தேர்தல் பணிகளில் கவனம் செலுத்துவதால், விவசாயிகளின் இந்தப் பிரச்சினைகள் கண்டுகொள்ளப்படவில்லை என விவசாய சங்கப் பிரதிநிதிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.