தமிழக அரசு மகளிருக்கு ரூ. 5 ஆயிரம் உரிமைத்தொகை வழங்கியதை முன்னிட்டு, திருவிடைமருதூர், திருபுவனம், ஆடுதுறை மற்றும் கும்பகோணம் பகுதிகளில் திமுகவினர் இனிப்புகள் வழங்கி கொண்டாடினர். உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி. செழியன் தலைமையில் இனிப்புகள் வழங்கப்பட்டன. தஞ்சாவூர் வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் க. அன்பழகன் எம்எல்ஏ தலைமையில் கும்பகோணத்தில் ஊர்வலம் மற்றும் பட்டாசு வெடித்தும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த உரிமைத்தொகை வழங்கப்பட்டதை மாவட்டம் முழுவதும் திமுகவினர் திருவிழா போல் கொண்டாடி வருகின்றனர்.