தஞ்சை மாவட்டத்தில் உள்ள 14 ஒன்றியங்களைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட ஊரக வளர்ச்சித்துறை பொறியாளர்கள், உதவி பொறியாளர் பணியிடங்களை அரசிடம் ஒப்படைப்பதைத் தவிர்க்க வேண்டும், மாவட்ட அளவில் தரக்கட்டுப்பாட்டு ஆய்வகம் அமைக்க வேண்டும், கூடுதல் உதவி செயற்பொறியாளர் மற்றும் மண்டல மேற்பார்வை பொறியாளர் பணியிடங்களைத் தோற்றுவிக்க வேண்டும், பணிப்பார்வையாளர் பதவி உயர்வு மற்றும் ஊதியம் தொடர்பான வழிகாட்டுதல்களை அமல்படுத்த வேண்டும் போன்ற முக்கியக் கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் மாவட்டத்தில் நடைபெற்று வந்த சாலை மற்றும் கட்டடப் பணிகள் உள்ளிட்ட அனைத்து வளர்ச்சிப் பணிகளும் தற்காலிகமாகப் பாதிக்கப்பட்டன.