தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூரில் வாடகைக் கட்டிடத்தில் அமைக்கப்பட்டுள்ள சமூக நீதி கல்லூரி மாணவர் விடுதியை தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி. செழியன் திறந்துவைத்தார். இந்த விடுதியில் 50 மாணவர்கள் தங்கிப் பயிலலாம். கடந்த ஓராண்டில் தஞ்சாவூர் மாவட்டத்தில் குந்தவை நாச்சியார் கல்லூரி, ஒரத்தநாடு மற்றும் திருவிடைமருதூர் உள்ளிட்ட இடங்களில் புதிய விடுதிகளும், கூடுதல் கட்டிடங்களும் கட்ட ஆணையிடப்பட்டு பணிகள் நடைபெற்று வருவதாக அமைச்சர் தெரிவித்தார். இந்நிகழ்வில் எம். பி. கல்யாணசுந்தரம் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.