தஞ்சாவூர்: தைப்பூச தேரோட்டம் திருவிழா ஆலோசனை கூட்டம்

ஸ்ரீ மகாலிங்க சுவாமி கோயில் தைப்பூச தேரோட்டம் திருவிழா அனைத்து துறை அலுவலர்கள் ஆலோசனைக் கூட்டம் தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூரில் உள்ள ஸ்ரீ மகாலிங்க சுவாமி திருக்கோயிலில் தைப்பூச திருவிழாவை முன்னிட்டு தேரோட்டம் மற்றும் தீர்த்தவாரி விழாவிற்கான ஏற்பாடுகளை செய்வதற்கான அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்ட ஆலோசனைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை கோயில் வளாகத்தில் நடைபெற்றது. வட்டாட்சியர் பாக்யராஜ் தலைமை வகித்தார். காவல் துணைக்கோட்ட கண்காணிப்பாளர் கே. ராஜு முன்னிலை வகித்தார். காவல் ஆய்வாளர் ராஜா வரவேற்று பேசினார்.
கூட்டத்தில் வரும் பிப். 10 இல் திருத்தேரோட்டமும் 11 இல் தைப்பூச தீர்த்த வாரியும் நடைபெறும், இந்த இரண்டு நாள் விழாவிற்கு தமிழகத்தின் பல பகுதிகளிலிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள் அவர்களுக்கு செய்ய வேண்டிய அடிப்படை வசதிகளான பாதுகாப்பு, குடிநீர், சுகாதாரம், பேருந்து இயக்கம், தற்காலிக தீயணைப்பு நிலையம் அமைத்தல், சுகாதார வசதிகள், நெடுஞ்சாலை வசதிகள், உள்ளிட்டவைகளை செய்வது பற்றி ஆலோசிக்கப்பட்டது. அனைத்து துறை அலுவலர்களும் கலந்து கொண்டனர்.