திருவிடைமருதூர் சட்டமன்றத் தொகுதியில் திமுக வேட்பாளர் கோவி. செழியன், தவெக வேட்பாளர் பிரபாகரனை 14,116 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றார். மொத்தம் 25 சுற்றுகள் நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில், கோவி. செழியன் 79,951 வாக்குகளும், தவெகவின் பிரபாகரன் 65,835 வாக்குகளும் பெற்றனர். அதிமுக மற்றும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் அடுத்தடுத்த இடங்களைப் பிடித்தனர்.