திருவிடைமருதூர் வட்டாரம் அம்மன்பேட்டை கிராமத்தில் வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை (அட்மா) திட்டத்தின் கீழ் நெல் சாகுபடி நல்ல விவசாய நடைமுறைகள் குறித்த பண்ணைப்பள்ளி பயிற்சி நடைபெற்றது. வேளாண்மை உதவி இயக்குநர் சந்தோஷ்குமார் தலைமை தாங்கி, விதைப்பு முதல் அறுவடை வரை நல்ல விவசாய நடைமுறைகள், வயல் சூழல் ஆய்வுகள், ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை குறித்து விளக்கினார். ஆடுதுறை நெல் ஆராய்ச்சி நிலைய பேராசிரியர் முத்துகுமார் மண்வள மேம்பாடு, களை மற்றும் நீர் மேலாண்மை பற்றி பயிற்சி அளித்தார். அட்மா திட்ட மேலாளர் சக்கரவர்த்தி திரவ உயிர் உர மேலாண்மை, பசுந்தாள் உரம் குறித்து தெரிவித்தார். விவசாயிகள் ஐந்து குழுக்களாகப் பிரிக்கப்பட்டு வயல் ஆய்வு மேற்கொண்டனர். ஏற்பாடுகளை வேதநாரயணன், சங்கீதா செய்தனர். உதவி வேளாண்மை அலுவலர் திருசங்கு நன்றி கூறினார்.