ரயில் மோதி அடையாளம் தெரியாத நபா் உயிரிழப்பு

0பார்த்தது
ரயில் மோதி அடையாளம் தெரியாத நபா் உயிரிழப்பு
தஞ்சாவூரில் இருந்து மயிலாடுதுறை செல்லும் ரயில் பாதையில் சன்னாபுரம் அருகே சுமார் 40 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத ஆண் ரயிலில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே இறந்து கிடந்தார். இதுகுறித்து திருவிடைமருதூர் கிராம நிர்வாக அலுவலர் முருகானந்தம் கும்பகோணம் ரயில்வே காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், உதவி ஆய்வாளர் மனோன்மணி, நிகழ்விடத்திற்கு போலீசாருடன் சென்று சடலத்தை கைப்பற்றி கும்பகோணம் அரசு மருத்துவமனையில் கூறாய்வுக்கு ஒப்படைத்து மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகிறார்.

தொடர்புடைய செய்தி