திறந்த வெளிக் கிடங்கில் பாதுகாப்பின்றி நெல் மூட்டைகள்...?

0பார்த்தது
திறந்த வெளிக் கிடங்கில் பாதுகாப்பின்றி நெல் மூட்டைகள்...?
கும்பகோணம், திருவிடைமருதூர், பாபநாசம் வட்டங்களில் 47 ஆயிரம் ஏக்கரில் நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. அறுவடை செய்யப்பட்ட நெல் மூட்டைகளை பாதுகாக்க பட்டீஸ்வரம் பகுதியில் 15 ஏக்கரில் 480 கேப்புகளுடன் திறந்தவெளி நெல் சேமிப்பு கிடங்கு திறக்கப்பட்டுள்ளது. தற்போது இப்பகுதியில் கடும் பனிப்பொழிவு காணப்படுவதால், தார்ப்பாய் கொண்டு மூடப்படாத நெல் மூட்டைகள் சேதமடையும் அபாயம் உள்ளது. எனவே, நெல் மூட்டைகளை உரிய முறையில் தார்ப்பாய் கொண்டு பாதுகாப்பாக மூடி வைக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி