தஞ்சை-விழுப்புரம் இரட்டை ரயில் பாதை: நிலம் கையகப்படுத்தும் பணி தீவிரம்

1107பார்த்தது
தஞ்சை-விழுப்புரம் இரட்டை ரயில் பாதை: நிலம் கையகப்படுத்தும் பணி தீவிரம்
தஞ்சாவூர் - விழுப்புரம் இடையே 193 கி.மீ. தொலைவுக்கு இரட்டை ரயில் பாதை அமைக்கும் திட்டத்திற்கான கள ஆய்வுகள் நிறைவடைந்துள்ளன. சுமார் ரூ. 5,800 கோடி செலவில் அமையவுள்ள இத்திட்டத்திற்கு தேவையான நிலம் கையகப்படுத்தும் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. தென்னக ரயில்வேயின் இந்த திட்டம் தென் மாவட்ட மக்கள் சென்னை செல்வதற்கும், சரக்கு போக்குவரத்துக்கும் பெரிதும் பயனளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பணிகள் விரைவில் தொடங்கும் என தெரிகிறது.

தொடர்புடைய செய்தி