சுவாமிமலை காவல் நிலையத்துக்கு உட்பட்ட தேவனாஞ்சேரி கீழத்தெரு மகேந்திரன் மகன் தேசிகன் வயது 26 கூலி வேலை செய்து வருகிறார். கடந்த சில மாதங்களாகவே தீராத வயிற்று வலி இருந்து வந்துள்ளது இந்த நிலையில் நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கு போட்டு கொண்டார். அவரது உறவினர்கள் கும்பகோணம் அரசு தலைமை மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர் டாக்டர்கள் பரிசோதனை செய்தபோது ஏற்கனவே இறந்து விட்டதாக தகவல் அளித்துள்ளனர் இந்த நிலையில் சாமி மலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள்