தஞ்சை: இருசக்கர வாகனம் கார் மோதி இளைஞர் பலி

1175பார்த்தது
தஞ்சை மாவட்டம், திருவிடைமருதூர் அருகே திருக்கோடிக்காவல் மெயின்ரோட்டை சேர்ந்த சுதர்சன் (23) என்பவர், சொந்த ஊருக்கு விடுமுறையில் வந்து உறவினர் வீட்டிற்கு சென்று திரும்பும் போது, கல்லணை பூம்புகார் சாலையில் இருசக்கர வாகனமும், காரும் மோதி விபத்துக்குள்ளானதில் படுகாயமடைந்து கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை பரிதாபமாக உயிரிழந்தார். சம்பவம் குறித்து பந்தநல்லூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி