தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் பா. பிரியங்கா பங்கஜம் அறிவித்துள்ளபடி, ஒன்றியங்களில் 16 முதல் 35 வயதுடைய இளைஞர்களுக்கான போட்டிகள் நடத்தப்படவுள்ளன. இதில் தடகளம், கபடி, வாலிபால், கேரம், கயிறு இழுத்தல், ஸ்ட்ரீட் கிரிக்கெட், ஓவியம், கோலப்போட்டிகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்புப் போட்டிகள் இடம்பெறும். ஒவ்வொரு ஒன்றியத்திலும் முதல் இடம் பெறுபவர்கள் மாவட்ட அளவிலான போட்டிகளில் பங்கேற்கலாம். ஜனவரி 21 மாலை 5 மணிக்குள் இணையதளம் மூலமாகவோ அல்லது போட்டி நடைபெறும் நாளிலோ நேரடியாகப் பதிவு செய்யலாம். கூடுதல் விவரங்களுக்கு 74017-03496, 95140-00777 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.