சென்னை கிண்டியில் அயோத்திதாச பண்டிதரின் பிறந்தநாளையொட்டி விசிக தலைவர் திருமாவளவன் மரியாதை செலுத்தினார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழக அமைச்சரவையில் விசிக இடம்பெற வேண்டும் என்று அக்கட்சியின் துணை பொதுச்செயலாளரும், அமைச்சருமான ஆதவ் அர்ஜுனா அழைப்பு விடுத்திருந்ததற்கு நன்றி தெரிவித்துள்ளார். மேலும், தவெக அமைச்சரவையில் இடம்பெறுவது குறித்து முக்கிய நிர்வாகிகளுடன் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என அவர் கூறியுள்ளார்.