“மலேசிய மக்களுக்கு நன்றி”.. பிரதமர் மோடி பதிவு

50பார்த்தது
“மலேசிய மக்களுக்கு நன்றி”.. பிரதமர் மோடி பதிவு
பிரதமர் மோடி 2 நாள் அரசு முறை பயணமாக நேற்று (பிப்.7) மலேசியா புறப்பட்டு சென்றார். இதுகுறித்து பிரதமர் மோடி பதிவு வெளியிட்டுள்ளார். அதில், “கடந்த ஆண்டு மலேசியாவில் நடந்த ஆசியான் மாநாட்டில் பங்கேற்க முடியவில்லை. இந்த ஆண்டில் நான் முதலில் பயணம் செய்த நாடு மலேசியா. இந்தப் பயணம் இந்தியா-மலேசியா இடையே உள்ள உறவுகளை வலுப்படுத்தும் வகையில் அமைந்தது. மலேசிய பிரதமர் அன்வர் இப்ராஹிம் மற்றும் அந்நாட்டு மக்களின் அன்புக்கு நன்றி” என குறிப்பிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி