"நயினார் நாகேந்திரன் தன் தரத்தை தாழ்த்திக் கொண்டுள்ளார்" என தவெக நிர்வாகி அருண்ராஜ் விமர்சித்துள்ளார். நடிகையை குறிப்பிட்டு விஜயை விமர்சித்த விவகாரத்தில் தவெக கொள்கை பரப்பு பொதுச்செயலாளர் அருண்ராஜ் இந்த பதிலை கொடுத்துள்ளார். முன்னதாக, ‘நடிகையை விட்டு விஜய் வெளியே வர வேண்டும்’ என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் விமர்சித்தது பெரும் சர்ச்சையானது. இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.