மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் தமிழக வெற்றிக் கழகத்திற்கு வெற்றி வாய்ப்பு அதிகம் இருப்பதாக 'Constituency Insights' நிறுவனம் நடத்திய கருத்துக் கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் தவெக 36% வாக்குகள் பெற்று முதலிடம் பிடிக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. அதிமுக 31% வாக்குகளுடன் 2-ஆம் இடத்தையும்,
திமுக 25.8% வாக்குகளுடன் 3-ஆம் இடத்தையும் பெறும் என்றும், நாம் தமிழர் கட்சி 1.1% வாக்குகள் மட்டுமே பெறும் என்றும் அந்த ஆய்வு
முடிவுகள் தெரிவிக்கின்றன.