தவெகவின் சிறப்பு பொதுக்குழு கூட்டம் வரும் நவம்பர் 5-ம் தேதி நடைபெறும் என்று அக்கட்சியின் தலைவர் விஜய் அறிவித்துள்ளார். இந்த கூட்டம் மாமல்லபுரத்தில் உள்ள 'ஃபோர் பாயிண்ட்ஸ் பை ஷெரட்டன்' ஹோட்டலில் நடைபெற உள்ளது. "தமிழ்நாட்டு மக்களுக்காக நம் அன்னை ஆர்த்தெழ வேண்டிய தருணம் இது. சூழ்ச்சியாளர்கள், சூதுமதியாளர்கள் அத்தனையையும் அச்சமின்றி உடைத்தெறிவோம். வருங்காலம் நமதென்று காட்ட, தீர்க்கமாகத் திட்டமிடுவோம்" என்று விஜய் இந்தக் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார்.