சேலம் சீலநாயக்கன்பட்டி அருகே உள்ள மைதானத்தில், தவெக தலைவர் விஜய்யின் மக்கள் சந்திப்பு கூட்டம் இன்று (பிப்., 13) நடைபெறவுள்ளது. நண்பகல் 12 மணிக்கு தொடங்கி பிற்பகல் 3 மணி வரை கூட்டம் நடைபெறும் என தகவல் வெளியாகியுள்ளது. அனுமதிச் சீட்டு பெறாத தொண்டர்களும், பொதுமக்களும் நேரில் வர வேண்டாம் என கட்சி தலைமை அறிவுறுத்தியுள்ளது. இந்தக் கூட்டத்திற்கு க்யூ ஆர் கோடுடன் கூடிய நுழைவுச் சீட்டு இருந்தால் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.