”செங்கோட்டையன் அண்ணனால், வேட்டி அவுந்துருமோனு பேண்ட் போட்டு சுத்திட்டு இருக்கேன்” என ஈரோடு மாவட்ட செயலாளர் விஜய் பாலாஜி கூறியுள்ளார். தவெக நிகழ்ச்சியில் பேசிய அவர், “செங்கோட்டையன் அண்ணன் தவெக-வில் இணைந்தவுடன் 20 வயது இளைஞராக மாறிவிட்டார். அவருடன் போட்டிப்போட முடியவில்லை” என்றார். இதனைக் கேட்ட செங்கோட்டையன் வெட்கப்பட்டு சிரித்துள்ளார். தொடர்ந்து, “2 வருடங்களுக்கு முன்பே தவெக-வில் இணையாமல் விட்டுவிட்டோமே என வருத்தத்தில் இருக்கிறார்” என பாலாஜி பேசினார்.