வடமாநில இளைஞர் மரணத்திற்கு காரணம் யார் என கேள்வி கேட்ட பத்திரிகையாளரின் காலில் தவெக நிர்வாகி காரை ஏற்றிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து பத்திரிகையாளரை தவெகவினர் மொத்தமாக சேர்ந்து பத்திரிகையாளர்களை தாக்க முயன்றனர். அப்போது பத்திரிகையாளர்கள் தாக்கியதில் தவெக தொண்டர் ஒருவர் தலை உடைந்து உயிரிழந்த சூரஜ் இருக்கும் மருத்துவமனையிலேயே அனுமதிக்கப்பட்டுள்ளார்.