செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கம் அருகே தையூரில் தனது மகளைக் காதலித்த பிரவீன் (22) என்ற இளைஞரைக் கூலிப்படை ஏவிக் கொலை செய்த வழக்கில் தவெக நிர்வாகி ஏழுமலை உள்பட 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இருவரும் ஒரே சமூகமாக இருந்தும் அந்தஸ்து காரணமாக இக்கொலை நடந்ததாகக் கூறி உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். தப்பியோடிய கூலிப்படைத் தலைவன் சதீஷை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.