தமிழக வெற்றி கழகம் மற்றும் காங்கிரஸ் கட்சிக்கு இடையேயான கூட்டணிப் பேச்சுவார்த்தை நெருங்கியுள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்த தகவலை திமுகவின் உளவுத்துறை, முதலமைச்சர் ஸ்டாலினுக்கு தெரிவித்துள்ளதாக தெரிகிறது. காங்கிரஸ் வெளியேறினால் கூட்டணியை சமாளிக்க தேவையான 'பிளான் பி' திட்டங்களைத் திமுக கையில் வைத்திருப்பதாக கூறப்படுகிறது. காங்கிரஸ் வெளியேறினால் மற்ற கூட்டணி கட்சிகளுக்கு காங்கிரஸ் தொகுதிகளைப் பிரித்து அளிப்பது குறித்தும், புதிய கட்சிகளை சேர்ப்பது குறித்தும் ஆலோசிக்கப்படவுள்ளது.