தமிழகத்தில் போதைப்பொருள் கடத்துபவர்கள், பாலியல் வன்கொடுமை செய்பவர்கள் மற்றும் கொலைகாரர்கள் சுதந்திரமாக நடமாடுவதாக
அண்ணாமலை விமர்சித்துள்ளார். ஆட்சியைப் பிடித்த கொண்டாட்ட மனநிலையில் இருந்து தவெக அரசு இன்னும் மீண்டு வரவில்லை எனக் குறிப்பிட்டுள்ள அவர், தமிழ்நாடு தற்போது உண்மையில் எந்த நிலையில் இருக்கிறது என்பதை உணர்ந்து தவெக அரசு பொறுப்புடன் செயல்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.