அரசு வழக்கறிஞர் நியமனத்திற்காக ரூ.15 லட்சம் லஞ்சப் பேரம் பேசிய ஆடியோ வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், கன்னியாகுமரி மாவட்டத் தமிழக வெற்றி கழக செயற்குழு உறுப்பினர் அனீஸ் கட்சிப் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். கட்சியின் கட்டுப்பாட்டை மீறியும், கட்சிக்குப் புகழீனத்தை ஏற்படுத்தும் வகையிலும் செயல்பட்டதால் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.