தவெக நெல்லிக்காய் மூட்டை போன்றது; சிதறிபோய்விடும் - இபிஎஸ் தாக்கு

3227பார்த்தது
தவெக நெல்லிக்காய் மூட்டை போன்றது; சிதறிபோய்விடும்  - இபிஎஸ் தாக்கு
தவெக நெல்லிக்காய் மூட்டை போன்றது; சிதறிபோய்விடும் என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி விமர்சித்துள்ளார். மதுராந்தகத்தில் இன்று அதிமுக வேட்பாளரை ஆதரித்து பரப்புரை மேற்கொண்ட அவர், ரிலிஸும் ரீல்ஸ்-ம் தான் தவெகவின் மூலதனம். தவெக நெல்லிக்காய் மூட்டை போன்றது; சிதறிபோய்விடும். எங்கள் வேட்பாளர்களை விலைக்கு வாங்கி தவெக வேட்பாளர்களாக நிறுத்தி உள்ளது. ராஜினாமா பரிசீலனையில் உள்ளபோது மாற்று கட்சியில் சேருவது சட்டவிரோதம், மதுராந்தகம் தொகுதியில் தவெக வேட்பாளர் டெபாசிட் இழக்க வேண்டும் என்றார்.

தொடர்புடைய செய்தி