தவெக ஊரையே விலை பேசுகிறது என்று சிபிஐ மாநிலச் செயலாளர் வீரபாண்டியன் குற்றம்சாட்டியுள்ளார். இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், இடைத்தேர்தலில் வாக்காளர்களை மட்டுமல்ல, தெருக்களையும், ஊரையும் விலை பேசுகின்றனர். அமைச்சரகள் ஊரை விலை பேசும் நடவடிக்கையில் உள்ளனர். அதனால் ஜனநாயகம் சீரழிந்துவிடும். கிராம மக்களின் கோரிக்கையை கேட்டு இப்போது தீர்த்து வைக்க வேண்டிய அவசியம் ஏன் வந்தது? தோற்றுப் போவோம் என்ற நெருக்கடியால் முதலமைச்சர் இத்தனை முறை ரோடு ஷோ செல்கிறார் என விமர்சித்தார்.