தமிழகம் முழுவதும் இன்று சட்டமன்ற தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. இந்நிலையில், சென்னை நீலாங்கரை இல்லத்தில் இருந்து வாக்களிக்க தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய் வருகைதந்தார். இதையடுத்து அங்கிருந்த தொண்டர்கள் விஜய்யை பார்க்க முண்டியடித்தபோது போடப்பட்டிருந்த சாமியான பந்தல் சரிந்து விழுந்தது. இதையடுத்து வாக்குச்சாவடி உள்ளே சென்ற விஜய், வாக்களித்துவிட்டு புறப்பட்டு சென்றார்.