தமிழகப் பொறுப்பு ஆளுநர் ராஜேந்திர அர்லேக்கர் சென்னை ஆளுநர் மாளிகை வந்தடைந்ததைத் தொடர்ந்து, தவெக தலைவர் விஜய் பனையூர் அலுவலகத்திலிருந்து அவரைச் சந்திக்கப் புறப்பட்டுள்ளார். காங்கிரஸின் ஆதரவுடன் தற்போது விஜய்யிடம் 113 எம்.எல்.ஏ-க்கள் உள்ளனர். இன்று மாலை ஆளுநரைச் சந்திக்கும் விஜய், ஆட்சி அமைக்க முறைப்படி உரிமை கோர உள்ளார். இதனால் தமிழகத்தில் புதிய ஆட்சி அமைவதற்கான நடவடிக்கைகள் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியுள்ளன.