கடலூர் மாவட்டத்தில் நாளை (ஏப்.9) நடைபெற இருந்த தவெக தலைவர் விஜயின் தேர்தல் பரப்புரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியில் நாளை சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறுவதை ஒட்டி விஜய்யின் பரப்புரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. முன்னதாக, கடலூரி பரப்புரை செய்ய போலீஸ் அனுமதியளித்த நிலையில், ரோடு ஷோ நடத்த தடை விதிக்கப்பட்டது. தேர்தல் நெருங்கி வரும் நிலையில், விஜய் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகிறார்.