வேலூர் அகரம்சேரி பகுதியில் தவெக தலைவர் விஜய் வரும் 23ஆம் தேதி பரப்புரை செய்யவுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. 30 ஏக்கர் பரப்பளவில் நடக்கும் விஜய் பரப்புரை கூட்டத்தில், 25 ஆயிரம் பேர் கலந்து கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது. சேலத்தில் நடந்த கூட்டத்தில் ஒருவர் உயிரிழந்த நிலையில், வேலூர் கூட்டத்திற்கு கடுமையான கட்டுப்பாடுகளை காவல்துறை விதித்துள்ளதாக கூறப்படுகிறது.