தவெக தலைவர் விஜய், வரும் டிசம்பர் 5 ஆம் தேதி புதுச்சேரியில் ரோடு ஷோ நடத்தத் திட்டமிட்டுள்ளார். இந்த ரோடு ஷோ-வை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடத்த அனுமதி கோரி, தவெ சார்பில் அதிகாரப்பூர்வமாக கடிதம் அளிக்கப்பட்டுள்ளது. மக்களவை தேர்தலை ஒட்டி, கட்சி தலைவர் விஜய் மேற்கொள்ளும் இந்த பயணம் புதுச்சேரியில் அரசியல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.