குண்டாஸ் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட தவெக ராமநாதபுரம் கிழக்கு மாவட்ட உறுப்பினர் எஸ். பரத், கட்சியின் அடிப்படை உறுப்பினர்
பதவி உள்ளிட்ட அவர் வகித்து வந்த அனைத்து பொறுப்புகளிலிருந்தும் நீக்கப்பட்டுள்ளார். கட்சியின் ஒழுங்கு விதிமுறைகளுக்கு முரணான செயல்பாடுகளில் ஈடுபட்டதாகக் கூறி, ராமநாதபுரம் கிழக்கு மாவட்டச் செயலாளர் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளார். இந்த அறிவிப்பு கட்சி வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.