நடந்து முடிந்த தேர்தலில் 108 இடங்களை வென்ற தவெக,
காங்கிரஸ், விசிக உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைத்து, மே 10-ல்
விஜய் முதல்வரானார். சோழவந்தான் தொகுதியில் வென்ற தவெக எம்எல்ஏ-வும், தற்காலிக சபாநாயகருமான எம்.வி.கருப்பையா,
விஜய் முதல்வர் ஆனால் ஜலபிரதட்சணம் செய்வதாக வேண்டியிருந்தார். வேண்டுதல் பலித்ததால், கிணற்றில் தவெக கொடியுடன் மிதந்து அவர் நேர்த்திக்கடன் செலுத்திய வீடியோ வைரலாகி வருகிறது.