தமிழ்நாட்டில் சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், தவெக தனது அரசியல் பணிகளில் தீவிரம் காட்டி வருகிறது. அந்த வகையில், சட்டப்பேரவை தேர்தல் பணிகளை மேற்கொள்ள 6 குழுக்களை அமைக்க தவெக தலைமை உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பூத் மேலாண்மை, போக்குவரத்து மேலாண்மை, சட்டம், பிரசாரம், விருந்தோம்பல் உள்ளிட்ட குழுக்கள் அமைக்க திட்டமிட்டுள்ளனர். ஒவ்வொரு தொகுதியிலும் குழுவுக்கு 10 பேரை நியமிக்க நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.