தவெக அரசின் முதல் நிதிநிலை அறிக்கை மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவு செய்யவில்லை என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் வீரபாண்டியன் தெரிவித்துள்ளார். வேலையில்லா பட்டதாரிகளுக்கான நிதியுதவி மற்றும் இலவசப் பேருந்து பயணம் போன்ற தவெகவின் பல முக்கியத் தேர்தல் வாக்குறுதிகள் இந்த பட்ஜெட்டில் இடம்பெறவில்லை என்று அவர் தனது அறிக்கையில் சாடியுள்ளார்.