சபாநாயகர் தேர்தலில் தவெகவின் ஜே.சி.டி பிரபாகர் போட்டியிடுகிறார்

4பார்த்தது
சபாநாயகர் தேர்தலில் தவெகவின் ஜே.சி.டி பிரபாகர் போட்டியிடுகிறார்
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் நேற்று (மே.10) முதலமைச்சராக பதவியேற்றார். இதையடுத்து தமிழக சட்டசபை கூட்டத்தொடர் இன்று (மே.11) தொடங்கி நடைபெற்று வருகிறது. நாளை (மே.12) சபாநாயகர், துணை சபாநாயகர் தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் தவெக சார்பில் ஜே.சி.டி பிரபாகர் போட்டியிடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் அவருக்கு எதிராக முன்னாள் அமைச்சர் சக்கரபாணியை நிறுத்த திமுக திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
Job Suitcase

Jobs near you