தவெக அரசு ஐந்து ஆண்டுகள் நீடிக்காது என்றும், அப்படியே நீடித்தாலும் மாநிலத்தின் கடன் ரூ.10 லட்சம் கோடியை தாண்டிவிடும் என்றும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சாடினார். கோவை விமான நிலையத்தில் இன்று (செப்.1) செய்தியாளர்களை சந்தித்த அவர், தவெக ஆட்சிப் பொறுப்பேற்ற 110 நாட்களில் மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு முற்றிலும் சீரழிந்துவிட்டதாக குற்றம் சாட்டினார். மேலும், நிர்வாக சீர்கேட்டின் காரணமாக தமிழகத்தில் குற்றச் சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக அவர் விமர்சித்துள்ளார்.