தவெக விஜய் சேலத்தில் தனது பரப்புரையை தொடங்கும் நிலையில் உயர் நீதிமன்ற வழிகாட்டுதல்களை முறையாக பின்பற்ற வேண்டும் என காவல்துறை அறிவுறுத்தியுள்ளது. அதில், பரப்புரைக்கு 4 வாரங்களுக்கு அனுமதி கோரினால் ஏற்பாடுகள் செய்ய ஏதுவாக இருக்கும் எனவும், பரப்புரைக்கு எவ்வளவு பேர் வருவார்கள் என்பதையும் குறிப்பிட வேண்டும் என கூறப்பட்டுள்ளது. மேலும், இரு சக்கரம் மற்றும் 4 சக்கர வாகனங்களில் வருவோரின் எண்ணிக்கையும் குறிப்பிட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.