வேலூரில் தவெக தலைவர் கலந்துகொள்ளும் நிர்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதில் கலந்துகொள்ள QR கோடு உடன் கூடிய பாஸ் வைத்திருக்கும் 4,900க்கு மட்டும் அனுமதி என கூறப்பட்டிருந்தது. இந்நிலையில், கூட்டம் நடைபெறும் இடத்திற்கு வந்த தொண்டர்கள் அனைவரும் போலீசாரின் கட்டுப்பாட்டை மீறி போடப்பட்டிருந்த தடுப்புகள் மீது ஏறி குதித்து அரங்கத்திற்குள் நுழைந்து வருகின்றனர்.