தவெகவை சேர்ந்த தொண்டர்கள் விசிகவில் இணைந்துள்ளனர். 2026 தேர்தல் நெருங்கும் நிலையில், மாற்றுக்கட்சியினரை தங்கள் கட்சிப்பக்கம் இழுக்கும்
வேலை தொடர்ந்து நடந்து வருகிறது. இந்நிலையில், கடலூர் வடக்கு ஒன்றியம் புதுக்கடை பகுதியைச் சார்ந்த தவெகவைச் சார்ந்த 30க்கும் மேற்பட்டோர் அக்கட்சியில் இருந்து விலகி, கள்ளக்குறிச்சி மண்டல விசிக துணை செயலாளர் பரசு முருகையன் தலைமையில், விசிகவில் இணைந்தனர்.