கரூர் சம்பவம் குறித்து முகநூலில் அவதூறான கருத்துகளை பதிவிட்டதால் நேற்று (அக்.12) தவெகவின் திண்டுக்கல் தெற்கு மாவட்டச் செயலாளர் நிர்மல்குமார் கைது செய்யப்பட்டார். இதையறிந்த தவெக நிர்வாகிகள் திரண்டு வந்து காவல் நிலையத்தை முற்றுகையிட்டு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்ட தவெக நிர்வாகிகளை போலீசார் கைது செய்து வாகனத்தில் ஏற்றி தனி மண்டபத்தில் வைத்தனர். பின்னர், கைது செய்யப்பட்ட தவெக தொண்டர்கள் விடுவிக்கப்பட்டு, மாவட்டச் செயலாளர் நிர்மல்குமார் மட்டும் சிறைக்கு அனுப்பப்பட்டார்.