சென்னை: தாயுமானவர் திட்டத்தில் இன்று (நவ.3) முதல் நவ.6ஆம் தேதி வரை வீடு வீடாக சென்று ரேஷன் பொருட்கள் வழங்கப்படவுள்ளது. 65 வயதுக்கு மேற்பட்டோர், மாற்றுத்திறனாளிகளின் இல்லங்களுக்கு நேரடியாக சென்று ரேஷன் பொருள் வழங்கவுள்ளனர். தாயுமானவர் திட்டத்திற்கான வயது வரம்பு 70-ல் இருந்து 65ஆக தளர்த்தி தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. தாயுமானவர் திட்டத்தில் 20.42 லட்சம் மூத்த குடிமக்களும் 1.27 லட்சம் மாற்றுத்திறனாளிகளும் பயன் பெறுகின்றனர்.