16வது நிதிக்குழு பாராபட்சமாக செயல்படுகிறது - அமைச்சர் தங்கம் தென்னரசு

52பார்த்தது
16வது நிதிக்குழு பாராபட்சமாக செயல்படுகிறது -  அமைச்சர் தங்கம் தென்னரசு
16வது நிதிக்குழு பாராபட்சமாக செயல்படுவதாக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு குற்றம்சாட்டியுள்ளார். தமிழக இடைக்கால பட்ஜெட்டை இன்று (பிப்., 17) தாக்கல் செய்த அவர், நிதி வருவாயை பகிர்ந்து வழங்கும் தற்போதைய முறையில் மாற்றம் தேவை மத்திய நிதி பகிர்வால் தமிழ்நாட்டிற்கு ரூ.3.1 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. தமிழ்நாடு, கர்நாடகா மற்றும் கேரளாவிற்கு குறைவான அளவே நிதி பகிர்வு வழங்கப்பட்டுள்ளது.  தமிழ்நாட்டுக்கு செயற்கையான நெருக்கடியை ஒன்றிய அரசு கொடுத்து வருகிறது என்று தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி