தமிழக பொறுப்பு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் கேரளாவில் இருந்து இன்று (மே 6) மதியம் சென்னை வருகை தருகிறார். தவெக தலைவர் விஜய் ஆட்சியமைக்க உரிமை கோரியுள்ள நிலையில், இன்று மாலை மக்கள்பவனில் நேரில் சந்தித்து எம்எல்ஏக்களின் ஆதரவு கடிதத்தை வழங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 108 இடங்களில் வென்ற தவெக மீதமுள்ள 11 எம்எல்ஏக்களின் ஆதரவை கோர காங்கிரஸ், விசிக, இடதுசாரிகளுக்கு கடிதம் அனுப்பியுள்ளது.