சன் டிவியில் ஒளிபரப்பாகி சில மாதங்களுக்கு முன்பு முடிவடைந்த சீரியல் தான் ‘எதிர்நீச்சல்’. இந்த சீரியலின் இரண்டாம் பாகத்திற்கான பணிகள் தற்போது நடந்து வருகிறது. முதல் பாகத்தில் நடித்த நடிகர்கள் அனைவரும் இரண்டாம் பாகத்திலும் நடித்து வருகின்றனர். முதல் பாகத்தில் ஜனனி என்கிற கதாபாத்திரத்தில் நடித்து வந்து நடிகை மதுமிதா சில தனிப்பட்ட காரணங்களுக்காக ‘எதிர்நீச்சல் 2’ சீரியலை விட்டு விலகுவதாக சமூக வலைதளப் பக்கத்தின் மூலமாக அறிவித்துள்ளார்.