தமிழ்நாடு முழுவதும் சூறாவளியாக சுற்றுப்பயணம் மேற்கொண்டு, மக்களை சந்தித்து இந்த ஆட்சியின் அவலங்களை எடுத்துச் சொல்வேன். அதேபோல், மக்கள் அனைவரும் எதிர்பார்க்கும் கூட்டணி, நிர்வாகிகள் விரும்பும் கூட்டணி நிச்சயமாக அமையும். இதே தான் நாடாளுமன்ற தேர்தலில் கூறினேன் என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால் நாடாளுமன்ற தேர்தல் வேறு, சட்டமன்ற தேர்தல் வேறு என அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பேசியுள்ளார்.