பொங்கல் பண்டிகையையொட்டி, தமிழக அரசு வழக்கமாக ரேஷன் கடைகளில் ஒரு கிலோ பச்சரிசியை மக்களுக்கு வழங்குகிறது. நடப்பாண்டு பொங்கலுக்கு வழங்குவதற்காக, ஆந்திர மாநிலத்தில் இருந்து, சரக்கு ரயிலில், டன் கணக்கில் பச்சரிசி வந்து கொண்டிருக்கிறது. சுமை தொழிலாளர்கள் இறக்கி லாரிகளில் ஏற்றி, நுகர்பொருள் வாணிப கழக குடோன்களுக்கு அனுப்பி வைத்து வருகின்றனர். ஜனவரி முதல் வாரத்தில் பொங்கல் தொகுப்பு வழங்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது.