யூடியூப் நிறுவனம் ஏஐ அடிப்படையிலான புதிய “சூப்பர் ரெசல்யூஷன்” அப்டேட்டை அறிமுகப்படுத்தவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பழைய லோ குவாலிட்டி (வீடியோ தரம் குறைந்த) வீடியோக்களை ஏஐ மூலமாக ஆட்டோமேட்டிக்காக உயர்தர (HD) வீடியோக்களாக மாற்றிக்கொள்ளும் வசதியை யூடியூப் நிறுவனம் கொண்டு வர உள்ளதாக தெரிவித்துள்ளது. பயனர்கள் செட்டிங்ஸில் உள்ள இந்த ஆப்ஷனை இயக்கினால், யூடியூப் வீடியோக்களின் தரத்தை ஏஐ மூலம் தானாக உயர்த்தும் வசதியை வழங்கும்.